மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இலங்கையர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாய்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் 20 பேரையும் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,மேலும் இலங்கையர்கள் 28 பேர் மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் இலங்கையர்கள் 56 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.