ரணில் ஆதரவுக் கூட்டணியின் தலைவராக தினேஷ்!

ரணில் ஆதரவுக் கூட்டணியின் தலைவராக தினேஷ்!

editor 2

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்வரும் நாட்களில் அமைக்கவுள்ள கூட்டணியின் தலைமைத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளார் என்று அரச தரப்பு தகவல்கள்
தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பப்படவுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு முழு நாட்டிலிருந்தும்
சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது அதனை அதிகரிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அரசியல்
உத்திகளைக் கையாண்டு வருகிறார்.

மேலும், புதிதாக அமைக்கவுள்ள கூட்டணி அதன் புதிய உத்தியாக பார்க்கப்படும் நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அதன் தலைமைத்துவத்துக்கு தயாராக இருப்பதும் அந்த உத்திகளுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article