பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் காரணமாகவே பஸில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நிறுத்தும் தீர்மானித்தினால் ராஜபக்ஷ குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவரும் அதனை நிராகரித்ததையடுத்து நாமல் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
பஸில் ராஜபக்ஷ செயல்பட்டு வந்ததுடன் இது தொடர்பில் பல்வேறு மட்டகலந்துரையாடலில் ரணில் – பஸில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.