ஊழியர் ஒருவர் காணாமல்போனமை தொடர்பில் கண்டறியுமாறு கோரி, தெமட்டகொடை தொடருந்து நிலைய பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சில ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் தொடருந்துகள் சேவை தாமதம் ஏற்படுவதோடு சில சேவை இரத்துச் செய்யப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெமட்டகொட தொடருந்து நிலைய ஊழியர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் தற்போது தமது பணி இடைநிறுத்தம் செய்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே ரயில்வே சேவை மற்றும் பதுளை ஒடிசி புகையிரதங்களை இதுவரையில் இயக்க முடியவில்லை என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலைமை காரணமாக பல ரயில் பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல குறிப்பிட்டுள்ளார்.