சுன்னாகத்தில் விபத்து! பெண் ஒருவர் மரணம்!

சுன்னாகத்தில் விபத்து! பெண் ஒருவர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் – சுன்னாகம் சந்திப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

சுன்னாகம் சந்திப் பகுதியில் காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹைஏஸ் வான் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை வீதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் அதே திசையில் பயணித்த வான் மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சங்கானையைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தன் சிவானந்தகௌரி
என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Share This Article