தேர்தல் அதிகாரிகள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டனர்!

தேர்தல் அதிகாரிகள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டனர்!

editor 2

சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாளை மறுதினம் (03) அழைக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 6 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அவர்களில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4 வேட்பாளர்களும் அடங்குகின்றனர். 

இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன ஆகியோர் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளனர். 

அதேநேரம், ஓசல ஹேரத், இலங்கை தொழிலாளர் கட்சியின் சார்பில் ஏ.எஸ்.பி லியனகே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணியின் பீ.டப்ளியூ.எஸ்.கே பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

Share This Article