ரி-56 ரக துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மத குரு கைது!

ரி-56 ரக துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மத குரு கைது!

editor 2

ரி -56 ரக துப்பாக்கிகள், அவற்றுக்கான ரவைகள், வாள் போன்றவற்றுடன் இஸ்லாமிய மத குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாதுகாப்புத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு – வாழைச்சேனை – பதுறியா நகரில் வைத்து விசேட அதிரடிப் படையினர் அவரைக் கைதுசெய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலநறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம் பெற்றது.

நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் மௌலவியின் இல்லத்தை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்தனர்.

இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில் அந்த வீட்டிலிருந்து 2 ரி – 56 ரக துப்பாக்கிகள், 59 ரவைகள், 2 மெகசீன்கள், ஒரு பைனகுலர், ஒரு வாள் என்பன
கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து மௌலவி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வரை கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Share This Article