வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் கடந்த 5 நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி முதல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதானவர்களில் 5 பெண்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.