ஜனாதிபதித் தேர்தல்; விசேட அறிக்கை வெளியிட்டது ஆணைக்குழு!

ஜனாதிபதித் தேர்தல்; விசேட அறிக்கை வெளியிட்டது ஆணைக்குழு!

editor 2

உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 50,000 ரூபாவையும், ஏனைய வேட்பாளர்கள் 75,000 ரூபாவவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஆகஸ்ட் 15ஆம் திகதி முற்பகல் 9 – 11 மணி வரை ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்றுக் கொள்ளப்படும்.

தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் தொடர்பில் அன்றைய தினமே முற்பகல் 9 – 11.30 மணி வரை ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடியும். எதிர்தரப்பு வேட்பாளர் அல்லது அவர் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களால் இந்த ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் சகல வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கமைய தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 50,000 ரூபாவையும், ஏனைய வேட்பாளர்கள் 75,000 ரூபாவவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

இன்று வெள்ளிக்கிழமை (26) முதல் வேட்புமனு தாக்கல் தினத்துக்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை காலை 8.30 முதல் மாலை 4.15 வரை தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான நிதி அதிகாரியால் கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும்.

Share This Article