பொலிஸ் மா அதிபருக்கு தடை; 2 தினங்களுக்குள் அமைச்சரவை நிலைப்பாடு!

பொலிஸ் மா அதிபருக்கு தடை; 2 தினங்களுக்குள் அமைச்சரவை நிலைப்பாடு!

editor 2

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடர்பான சட்டத்தன்மையை ஆழமாக ஆராய்ந்து, இன்னும் 2 தினங்களுக்குள் அமைச்சரவை நிலைப்பாட்டை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்றையதினம் (24) அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன்போது காவல்துறை மா அதிபர் குறித்த உயர் நீதிமன்றின் உத்தரவு தொடர்பாகக் கருத்தாடல்கள் இடம்பெற்றதுடன், இந்த உத்தரவில் பல்வேறு சட்டத்தன்மை சார்ந்த குழப்பங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இன்று பிற்பகல் அளவிலேயே அமைச்சரவைக்குக் கிடைக்கப்பெற்றது.

இந்த உத்தரவின் சட்டத்தன்மை மற்றும் அதன் குழப்பங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய வேண்டி இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இது குறித்து ஆழமாக ஆராய்ந்து எதிர்வரும் 2 தினங்களுக்குள் அமைச்சரவையின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share This Article