பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்கும் வகையில் ஜனாதிபதியிடமிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய (24) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.