நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஒன்பது பேர், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் குறித்த மீனவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.