ஓமான் கடலில் விபத்தில் சிக்கி கவிழ்ந்த கப்பலின் தலைமை மாலுமி (கப்டன்) இலங்கையை சேர்ந்த தமிழர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இதுவரை மீட்கப்படாததால் அவரின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயினர். இவர்களில் இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேரை இந்திய கடற்படை மீட்டது.
எனினும், உயிர் காக்கும் படகில் புறப்பட்ட 6 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிய வருகின்றது.
இதனிடையே, கவிழ்ந்த கப்பலின் தலைமை மாலுமி இலங்கை சேர்ந்த தமிழரான வைத்தியகுமார் என்பவராவார். அவர் பற்றிய தொடர்பு எதுவுமில்லாத நிலையில், அவரின் மகள் துளசி வைத்தியகுமார் கவலை வெளியிட்டுள்ளார்.