சென்னையை சேர்ந்த சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
800 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை 6 மணிக்கு இந்தக் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் கடந்த புதன்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. அங்கிருந்து, நேற்றுமுன்தினம் திருகோணமலை துறைமுகத்தை அடைந்ததுடன், நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.