அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜோசப் ஸ்டாலின்!

அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஜோசப் ஸ்டாலின்!

Editor 1

அண்மைய வேலைநிறுத்தத்தின் போது கடமையாற்றியஆசிரியர்களுக்கு ஒரு தடவை கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

‘1986 இல், உயர் நீதிமன்ற சம்பள மாற்றங்கள் தொடர்பில் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் இதுபோன்ற சமத்துவமற்ற சம்பள அதிகரிப்பை ஏற்கமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் செல்வோம்’ என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் இவ்வாறு பார பட்சம் காட்டக்கூடாது என்றும் அவர் கூறினார்.

Share This Article