விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (17) இடம்பெற்றிருந்தது.
புதன்கிழமை (17.07.2024) மாலை 3 மணியளவில் சிறிகோத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நிர்வாக குழுவின் அழைப்பினை ஏற்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைப்பீடம் கருணா அம்மான் தலைமையில், உபதலைவர் ஜெயா சரவணா மற்றும் செயலாளர் செந்தூரன் ஆகிய குழுவினர், ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சராக உள்ள அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையில் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாகவும், சிறப்பான முடிவுகளுடன் ஆராயப்பட்டுப் பேசப்பட்டதாகத் தெரியவருகிறது.