ஐக்கிய நாடுகள் கல்வியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின்
(யுனெஸ்கோ) தலைவர் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ பயணமாக எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை வருகிறார்.
அரசின் அழைப்பில் நாட்டுக்கு வருகை தரும் யுனெஸ்கோ தலைவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இந்தக் காலப்பகுதியில், யுனெஸ் கோவில் இலங்கை இணைந்த 75 ஆண்டுகள் நிறைவு விழாவிலும் பங்கேற்பார்.
அத்துடன், யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமையாக பிரகடனப் படுத்
தப்பட்ட இலங்கையிலுள்ள இடங்களையும் அவர் பார்வையிடுவார்.
இதன்போது அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகி
யோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.