தற்கொலை முயற்சிகளால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆயிரம் பேர் வரையானோர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ நிபுணர் முத்துலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தலைமையில் மருத்துவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட மருத்துவர் நவநீதன், தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. யாழ்.போதனா மருத்துவமனையில் 750 முதல் ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தற்கொலை முயற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், 75 – 100 பேர் வரையிலானவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் கூறினார்.