யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கொழும்புத்துறை – ஏ. வி. வீதி – மூன்றாம் ஒழுங்கையில் வசித்து வந்த திவிகரன் நிஷானி (வயது 29) என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.