இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தை திருத்துவதற்கான திருத்தச் சட்டமூலத்திற்கு நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அந்தக் குழு கூடிய போது இவ் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த சட்டமூலம் கடந்த மே மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.