நாட்டின் பிளவுகளைக் குறைக்க சம்பந்தன் அயராது பாடுபட்டார் – ஜனாதிபதி இரங்கல்!

நாட்டின் பிளவுகளைக் குறைக்க சம்பந்தன் அயராது பாடுபட்டார் - ஜனாதிபதி இரங்கல்!

editor 2

ஒரு தேசியத் தலைவராக இரா. சம்பந்தன் நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார் – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தனின் மறைவையொட்டி அவர் விடுத்த இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இரா. சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு தேசியத் தலைவராக நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளை குறைக்க அயராது பாடுபட்டார். அவரின் இழப்புக்கு நாடு முழுவதுமே இரங்கல் தெரிவிக்கும் – என்றும்
ஜனாதிபதி கூறியுள்ளார்.

Share This Article