பனிக்கன்குளம் விபத்தில் காயமடைந்த மற்றொருவரும் பலி!

பனிக்கன்குளம் விபத்தில் காயமடைந்த மற்றொருவரும் பலி!

editor 2

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி – மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒருவரே சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article