ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்துக் கட்டணத்தை ஐந்து வீதம் குறைப்பதற்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு; கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.
அதன்படி, ஆரம்ப கட்டணத்தை 2 ரூபாவால் குறைத்து 28 ரூபாவாக அறிவிடத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த பேருந்துக் கட்டண குறைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.