கச்சதீவு பிரச்னை, பாக்கு நீரிணையில் இலங்கை – இந்திய நாடுகளின் எல்லை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளும் விரிவான உடன்பாட்டை எட்டியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
உடன்பாடு எட்டப்பட்டமை தொடர்பான விடயத்தை இந்தியாவின் பிரபல ஊடக மான தி இந்துவுக்கு அதிகாரபூரவ் செயத்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்திய போதிலும் ஒப்பந்தத்தின் விவரத்தை வெளியிட மறுத்து விட்டார் என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சதீவு, கடல் எல்லைகள் தொடர்பில் இரு நாடுகளும் உடன் பாடுகளை எட்டியபோதிலும் உடன் படிக்கை எதனையும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கச்சதீவு விவகாரம் குறித்த பிரசாரம் பிரதான பேசுபொருளாக மாறிய நிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.
இதனிடையே, இலங்கையின் கடல் எல்லைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ கலந்துரையாடபப்படவில்லை. 1974ஆம் ஆண்டு; கச்சதீவு இலங்கைக்கு உரித்தானதாக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.