ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் – ஜனாதிபதி ரணில்!

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் - ஜனாதிபதி ரணில்!

editor 2

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது.

ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்குமாயின் பாடசாலை மாணவர்கள் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article