19 கல்வியியற் கல்லூரிகளையும் இணைத்து தேசிய பல்கலைக்கழகம் அமைக்க அங்கீகாரம்!

19 கல்வியியற் கல்லூரிகளையும் இணைத்து தேசிய பல்கலைக்கழகம் அமைக்க அங்கீகாரம்!

editor 2

நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் இணைத்து கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசியக் கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் பயிலுனர்கள் 3 வருடப் பயிற்சியின் பின்னர் தகுதியான ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியாகுவோர், கல்வியியல்துறை இளங்கலைமாணி பட்டம் பெற்ற ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர்.

சர்வதேசக் கல்வித் தரத்தைப் பேணுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்காக நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் இணைத்து கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article