தான் இறந்ததாக வெளியான செய்தி; கண்ணீருடன் காணொளி வெளியிட்ட அப்துல் ஹமீத்! (காணொளி)

தான் இறந்ததாக வெளியான செய்தி; கண்ணீருடன் காணொளி வெளியிட்ட அப்துல் ஹமீத்!

editor 2

தான் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் கண்ணீரூடன் காணொளி ஒன்றை பிரபல மூத்த ஒலிபரப்பாளர் பி.எஸ்.அப்துல் ஹமீத் வெளியிட்டுளார்.

குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற சமூகவலைளத்தளங்கள் பல குறித்த செய்தியை நேற்றைய நாள் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில்,

இது தொடர்பில் இன்று காலை அப்துல் ஹமீத் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

தனக்கு இவ்வாறான அனுபவம் 3 முறை நேர்ந்துள்ளதாகவும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தன்னையும் மனைவியையும் எரித்துக்கொன்றுவிட்டதாகவும் கடந்த ஆண்டு தமிழக youtube தளம் நடத்தும் ஒருவர் அதிக பணம் சம்பாதிப்பதற்காக “பிரபல ரிவி அறிவிப்பாளர் மரணம்; கதறி அழுதது குடும்பம்” என்று காணொளி ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களை கையாள்வது இலகு என்பதால், ஊடக அறம் தொடர்பில் அடிப்படை அறிவற்றவர்கள் பலர் போலியான செய்திகளையும், போலியான தலையங்கங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஊடகங்கள் தொடர்பில் வாசகர்கள் வைத்திருக்கின்ற நன்மதிப்பை சீரிழித்துவருகின்றனர் எனகின்றார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

Share This Article