ஐ.தே.க – ஜே.வி.பி சந்திப்பு

ஐ.தே.க - ஜே.வி.பி சந்திப்பு

editor 2

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் பாராளுமன்றத்தில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரை தவிர வேறு எவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள
அனுமதியளிக்கப்படவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை ஒருவருடத்துக்கு ஒத்திவைக்கும் முயற்சியில் ஐ.தே.க ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் பின்புலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்து இதன் போது வஜித அபேவர்தன விஜித ஹேரத்திடம் வினவியதாக தெரியவருகிறது.

என்றாலும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க ஒருபோதும் தேசிய மக்கள் சக்தி அனுமதிக்காது என்பதுடன், அவ்வாறான முயற்சிகள் இடம் பெற்றால் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ள நேரிடும் என விஜித ஹேரத் எச்சரித்துள்ளார். கடுமையான வாக்குவாதங்களுடன் இந்த சந்திப்பு நிறைவு பெற்றதாகவும் தெரியவருகிறது.

Share This Article