2ஆவது மின் கட்டணத் திருத்தம் ஜூலை 15 அறிவிப்பு!

2ஆவது மின் கட்டணத் திருத்தம் ஜூலை 15 அறிவிப்பு!

Editor 1

2024 ஆண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்

இதேவேளை உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூலமான கருத்துக்கள் ஜூலை 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மூலமான கருத்துக்கள் ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டண திருத்தத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதுடன் அதன்படி குறைக்கப்பட்ட சதவீதங்கள் ஜூலை 15ம் தேதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article