தனது இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்க உக்ரைன் மறுப்பு!

தனது இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்க உக்ரைன் மறுப்பு!

Editor 1

ரஸ்யாவிற்கு எதிரான போரில் தன்னுடைய இராணுவத்துடன் இணைந்து போரிடும் இலங்கையர்கள் குறித்து உக்ரைன் கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்றது.

உக்ரைனிற்காக போரிடும் இலங்கையர்கள் குறித்து இலங்கை விபரங்களை கோரியுள்ள போதிலும் உக்ரைன் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிக்கின்றது என உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சும் துருக்கிக்கான இலங்கை  அரசாங்கமும் உக்ரைனுடன் இணைந்து போரிடும்இலங்கையர்கள் குறித்த விபரங்களை இரண்டு வாரங்களிற்கு முன்னர் கோரியிருந்த போதிலும் உக்ரைன் எந்த பதிலையும் வழங்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தனது முன்னைய வேண்டுகோளை நினைவுபடுத்தி  ஒரு வாரத்திற்கு முன்னர் மீண்டும் தகவல் அனுப்பியிருந்ததாகவும் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராலயமும் இந்தியாவிற்கான உக்ரைன் தூதரகத்திடம் தகவல்களை கோரியுள்ளது.

இதேவேளை உக்ரைன் தனது நாட்டின் சட்டத்திற்கு ஏற்பஇலங்கையர்களை படையணியில் இணைத்துகொண்டுள்ளது என தெரிவிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நாடு  தகவல்களை வழங்குவது தாமதமாகலாம் என்ற யதார்தத்தை வெளிவிவகார அமைச்சு உணர்ந்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ரஸ்யாவில் போரிடும் இலங்கையர்களை விடுவி;ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.அவர்கள் தங்கள் நாட்டின் விதிமுறைகளிற்கு ஏற்பவே படையணிகளில் சேர்க்கப்பட்டார்கள் என ரஸ்யா வலியுறுத்துவதே இதற்கு காரணம்.

தன்னுடைய படையணியில் இணைந்துகொண்டவேளை  இலங்கையர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர் அதனை அவர்கள் மதிக்கவேண்டும் என ரஸ்யா வலியுறுத்துகின்றது.

Share This Article