ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுக்குமாயின் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர், .
“தேர்தலை பிற்போடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடன்படபோவதில்லை. ஆகவே தேர்தலை பிற்போடும் யோசனையை
ரணில் விக்கிமசிங்க நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரமாட்டார்.
ஜனாதிபதிக்கு அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இன்று அரசாங்கத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும், எமது கட்சி என்ற ரீதியில்.. நாம் எடுத்த கொள்கை ரீதியிலான தீர்மானங்களையே முன்னெடுக்கின்றனர்.
ரணில் விக்கிமசிங்க 2015 தொடக்கும் 2020 வரைக்கும் இந்த நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். ஆனால் அப்போது அவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருந்தது.
எனினும், இந்த இரண்டு ஆண்டுகளில் அவரால் ஏதோஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தல்லவா? இதிலிருந்து எமது கட்சியிலுள்ள அமைச்சர்களிடருந்தும், எம்மிடமிருந்தும், அவருக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து தெளிவாக தெரிகின்றதல்லவா?
நாம் இந்த அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருப்பதனாலேயே ரணில் விக்கிமசிங்கவுக்கு இவ்வாறான மாற்றத்தை கொண்டு வர முடிந்துள்ளது.
ஆகவே, அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கத்தை பலப்படுத்துமாறு, நாம் எமது கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதியை வழங்கினோம்.” என தெரிவித்தார்.