கடந்த முதலாம் திகதி முதல் பெய்து வந்த பலத்த மழை காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளில் தற்சமயம் வெள்ள நீர் வழிந்தோடி வருதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
இதன்காரணமாக 50,000இற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.
அத்துடன் கடந்த முதலாம் திகதி முதல் இதுவரையில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவதானிக்கச் சென்றவர்களும் அதிகளவில் அடங்குவதாகவும் இவ்வாறாக அனர்த்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் குறித்த பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.