நாட்டில் கடந்த ஐந்து மாதங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு
நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் 90 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அடுத்து வந்த பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் குறைந்தளவான நோயாளர்களே பதிவாகினர். இந்த நிலையில் மே மாதத்தில் மீண்டும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயால் 9 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.