விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு கிராமப்புற அபிவிருத்தி மற்றும் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதிர்வரும் மாதங்களில் 2 ஆயிரத்து 60 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
விவசாயம் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று அமைச்சர்
மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சாத்தியமான இடங்களில் புதிய விவசாய திட்டங்களை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வருமான மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் நுட்ப பயன்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
விவசாய அமைச்சில் நடந்த கலந்துரையாடலிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர மேற்படி விடயங்களை தெரிவித்தார்.