பள்ளிமுனை கடற்பரப்பில் படகு கவிழ்ந்து மீனவர் மரணம்!

பள்ளிமுனை கடற்பரப்பில் படகு கவிழ்ந்து மீனவர் மரணம்!

Editor 1

மன்னார் – பள்ளிமுனை கடற்பரப்பில் வள்ளம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன் தினம் கடற்றொழிலுக்காக சென்றபோது திடீரென கடும் காற்று வீசியமையினால் வள்ளம் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அவருடன் சென்ற ஏனையோர் தப்பி யுள்ளபோதிலும் குறித்த மீனவர் கடலில் மூழ்கி உயிரி ழந்துள்ளார்.

இதனையடுத்து ஏனையோர் இணைந்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதி யைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.

Share This Article