இறுதிப் போரில் 169,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் – பிரிட்டன் எம்பி!

இறுதிப் போரில் 169,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் - பிரிட்டன் எம்பி!

Editor 1

தமிழ் நாட் காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் கொல்பேர்ன், முள்ளிவாய்க்காலின்  இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது இது ஒரு இனப்படுகொலை என பலர் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் யுத்தசூன்யவலயத்தில் கண்மூடித்தனமான குண்டுவீச்சினை மேற்கொண்டது படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்தாயகப்பகுதிகளான வடக்குகிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடரும் ஒடுக்குமுறைகளை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பிரிட்டன் தெளிவான எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான வெளிப்படையான ஜனநாயக சமூகத்தில் மக்கள் நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடமுடியாது சுதந்திரமான நியாயமான ஜனநாயகத்தில் நீங்க்ள இதனை செய்யவேண்டும் என கொல்பேர்ன் தெரிவித்துள்ளார்.

ஓவ்வொருவருடமும் நாங்கள் இதனை கேள்விப்படுகின்றோம் நினைவேந்தல் குழப்ப்படுவது குறித்த கதைகளை கேட்கின்றோம் மக்கள் காரணமில்லாமல் கைதுசெய்யப்படுகின்றனர் இதன் காரணமாக இதனை நிறுத்தவேண்டும் என்ற வலுவான செய்தியை பிரிட்டன் தெரிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

2009 இல் இடம்பெற்ற சம்பவங்களை இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்வதற்கான தேவை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இதற்கான முயற்சிகளில்  தானும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share This Article