இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்த பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று ( 08 ) அறிவித்தது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அந்த பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.