சமூக வலைத்தளங்களில் அவதூறு; இராணுவத்தளபதி வழக்குத் தாக்கல்!

சமூக வலைத்தளங்களில் அவதூறு; இராணுவத்தளபதி வழக்குத் தாக்கல்!

Editor 1

சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு தம்மை அவமானப்படுத்துவதை நிறுத்துமாறு கோரி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று தனிப்பட்ட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

2024 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க  நிகழ்நிலை காப்புச் சட்டத்தின்  பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் பிரிவு 24 இன் படி இந்த வழக்கை அவர் தாகக்ல் செய்துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வாதியாகவும், இந்த தனிப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான துஷார சாலிய ரணவக்க என்ற மிட்செல் ரணவக்க மற்றும் இணைய யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனம் பிரதிவாதிகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான தனிப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

Share This Article