நேற்றைய தினம் ஆரம்பமான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு செப்ரெம்பர் மாதத்துக்குள் வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்காக சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்
என்றும் அவர் கூறினார்.
நேற்று ஆரம்பமான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 03 ஆயிரத்து 527 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைக்கு 04 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.