வலுவான நிலையில் இலங்கையின் பொருளாதாரம் – அமெரிக்கா!

வலுவான நிலையில் இலங்கையின் பொருளாதாரம் - அமெரிக்கா!

Editor 1

பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள செயற்திட்டங்களை தடையின்றி முன்னெடுத்தால் எதிர்காலத்தில் நெருக்கடியான
நிலை தோற்றம் பெறாது என்றும் மறுசீரமைப்புக்களால் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது எனவும் அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச்செயலாளர் ரொபட் கப்ரோன், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோர்ஜியாவில் இடம்பெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சருக்கும், அமெ ரிக்க திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது, பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் மற்றும் செயல்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் 2024 – 2028 வரையான காலப்பகுதியில் கூட்டிணைவு மற்றும் மூலோபாய செயல்திட்டம் மற்றும் பொருளாதார மீட்சி உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Share This Article