பாவனைக்கு உதவாத அரிசியை உலக உணவுத்திட்டமே வழங்கியது என்கிறது இலங்கை அரசாங்கம்!

பாவனைக்கு உதவாத அரிசியை உலக உணவுத்திட்டமே வழங்கியது என்கிறது இலங்கை அரசாங்கம்!

Editor 1

பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் சிறுவர்களின் பாவனைக்கு உதவாத அரிசி உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்டதே. அது, அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்று கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

அரசாங்கத்துக்கு உதவும் வகையில், அரிசி பொதிகள் உலக உணவுத் திட்டத்தால் மேலதிகமாக வழங்கப்பட்டது.

அரச நிதியில் விநியோகிக்கப்படும் உணவு சிறுவர்கள் உண்பதற்கு ஏற்றது என்பதை அரசு உறுதி செய்கிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக பாடசாலைகளுக்கு அரிசி கையிருப்புக்காக வழங்கப்பட்ட பின்னரும் மாகாண பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கமான தர பரிசோதனைகளை செய்யும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூபாய் 110 வீதம் ஒதுக்குகிறது.

அதுமட்டுமில்லாமல் வேறு ஆதாரங்களிலுமிருந்தும் நிதி கிடைக்கப் பெறுகிறது. எனவே, உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியுடன் அரசாங்கத்தின் நிதியுதவியில் கிடைக் கும் அரிசியை கலக்க வேண்டாம் – என்றார்.

Share This Article