இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைப்பதற்கான பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். எங்களின் முயற்சி இரு நாடுகளின் வளர்ச்சியையும் வலுவூட்டும். இது நிச்சயம் ஒரு ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை – இவ் வாறு தெரிவித்துள்ளார் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தா னிகர் சந்தோஷ் ஜா.
இராமாயண பாதை திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் சுற்றுலா பயணிகள் இந்திய ரூபாயில் பணம் செலுத்த அனுமதிக்கும் யு. பி. ஐ. முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எம்மை பல நூற்றாண்டுகள் முன்னே அழைத்து செல்கிறது. ஏனெனில், முன்னர் இந்தியா, இலங்கையில் ஒருவரின் நாணயத்தை மற்றொருவர் பரிமாறிக் கொண்டனர்.
இராமாயண – பௌத்த பாதையை மேம்படுத்த எங்களின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இது நமது தலைவர்களின் – பிரதமர் மோடி, ஜனாதிபதி
ரணிலின் தொலைநோக்கு பார்வை.
2023 ஜூலையில் இது இறுதி முடிவானது.
இராமாயண பாதை இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்களின் வருகையை அதிகரிக்கும். ஏற்கனவே, இலங்கை வரும் சுற்றுலா பயணிகளில் 5இல் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் இந்தியர்களாவர். இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதால் இலங்கைக்கு அதிக பொருளாதார நன்மைகள் ஏற்படும். இலங்கையின் அனைத்து மாகாணங்களும் இதன் மூலம் நன்மை அடையும் – என்றார்.