உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை – சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை - சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு!

Editor 1

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச உதவியை பெறவேண்டும் எனவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல், சமூக கலாசார பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ள
சமூகம் மற்றும் மத நிலைய ஆராய்ச்சி அமைப்பு தனது அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணையை கோரியுள்ளது.

அந்த அறிக்கையில், 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்
பட்டவர்களுக்கு ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் நீதி கிடைக்க
வில்லை.

சர்வதேச விசாரணைகளை மேற் கொண்டு தாக்குதலுக்கு காரணமான வர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் குறிப்பாக சூத்திர
தாரிகளுக்கு எதிராக உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டவர்கள் அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதிசெய்ய
வேண்டும் – என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Share This Article