நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய இடங்களில் உள்ள அரசாங்க அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டு 30 இலட்சம் கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன நெல் கையிருப்பின் பெறுமதி ஒரு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.