உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

editor 2

மூன்றாம் நபரின் தலையீடின்றி உற்பத்தியாளர்களே தமது உற்பத்திகளை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை எவ்வாறு
உருவாக்கலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடந்த இந்தக் கலந்துரை
யாடலில், ‘வடக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களும் இருக்கின்றன.

ஆனால், அதை உரிய முறையில் பயன்படுத்தவில்லை. வடக்கிலிருந்து சிலர் ஏற்றுமதிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் மூன்றாம் தரப்பு ஊடா
கவே ஏற்றுமதிகளை முன்னெடுக்கின்றனர். அவர்கள் நேரடியாக ஏற்றுமதியை
முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஏற்றுமதியுடன் தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைந்து இதனை செயல்படுத்தவேண்டும் – என்று ஆளுநர் கூறினார்.

சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரவீந்திரகுமார், ‘சாதாரண விவசாயியும் ஏற்றுமதியாளராக வேண்டும் என்ற நோக்கிலேயே இதைச் செயல்படுத்த முனைவதாகக் குறிப்பிட்டார். ஏற்றுமதி தொடர்பான நீண்ட
நடைமுறைகள் காரணமாக சிறுதொழில் முயற்சியாளர்கள் பலர் ஏற்றுமதியை கைவிடுகின்றனர். எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம்’ என்று குறிப்பிட்டார்.

ஏற்றுமதியுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்களினதும் பிரதிநிதிகள் வடக்கில் உரிய அதிகாரத்துடன் இருக்க வேண்டும். இதற்குரிய அதிகார பரவலாக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேலும், ஏற்றுமதிக்கான சில பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான வளங்கள் கொழும்பில் மாத்திரம் உள்ளமையால், அத்தகைய பரிசோதனைகள் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

ஒரு மாத காலத்தினுள் ஏற்றுமதியுடன் தொடர்புடைய திணைக்களங்களை
ஒருங்கிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்தக்கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

Share This Article