இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத ஹக்கர்கள் தொடர்பில் விசாரணை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆகிய முன்னெடுத்துள்ளன.
பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு கல்வி அமைச்சு கவலை தெரிவித்ததுடன், உத்தியோகபூர்வ இணையத்தளத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் உறுதியளித்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல் “அனோனிமஸ் EEE” என்ற ஹக்கர்கள் குழு இணையளத்தளத்திலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம் சுட்டிக்காட்டியதோடு, அத்துமீறி உள் நுழைந்தமைக்கு மன்னிப்புக் கோரி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.