மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிண்ணையடிப் பகுதியை சேர்ந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்சார வடத்தை நீர் இறைக்கும் இயந்திரத்துடன் பொருத்த முயற்சித்த போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவர், வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்
உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.