யாழ்ப்பாணம் – வடமராட்சி இளைஞரின் கையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கையை இழந்தவரின் மைத்துனர் கைது செய்யப்பட்டு – மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புலோலி – வட்டுவனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செல்வநாயகம் செந்தூரன் என்பவரின் கையை வெட்டிய வாள்வெட்டு கும்பல் அந்தக் கையையும் எடுத்துச் சென்றது.
கையை இழந்தவருக்கும் அவரின் தங்கையின் கணவருக்கும் (மைத்துனர்) இடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.