இலங்கையின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் உறுதியாகியுள்ளது. 2.2 வீத மிதமான வளர்ச்சியை காட்டுகிறது. எனினும், நாட்டில் இன்னும் உயர் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சார்ந்த பிரச்னைகள் காணப்படுகின்றன. இவ்வாறு இலங்கை, மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார்.
அத்துடன், ஏழைகள், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய தாக்கத்தை தணிக்க உறுதியான முயற்சிகள் முக்கியமானவை. இதனுடன் காத்திரமான
நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பேரினப் பொருளியல் உறுதித் தன்மைக்கு பங்களிப்பு செய்கின்ற மறுசீரமைப்புகளை பேணுதல், தனியார் முதலீடுகளை தூண்டக்கூடிய மற்றும் முலீட்டு உள் வருகையை தூண்டக்கூடிய மறுசீரமைப்புகளை துரிதப்படுத்தல் ஆகியவை செய்யப்பட வேண்
டும். இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றுக்கு முக்கியமாகும்.
இருப்பினும், தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொழில் படை பங்குபற்றுதலிலும் வீழ்ச்சி காணப்பட்டது. குறிப்பாக, பெண்கள் மற்றும் நகரப் பிரதேசங்களில் இது காணப்பட்டது.
நுண், சிறிய, மத்திய அளவிலான நிறுவனங்கள் மூடப்பட்டதனால் இந்த பிரச்னை அதிகமானது.
அதிக விலையேற்றம், வருமான இழப்புகள், போதிய வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக உணவுத் தேவைப்பாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வி சார்ந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை குடும்பங்களுக்கு ஏற்பட்டது.
பண வீக்கத்தின் படிப்படியான அதிகரிப்புக்கள் மற்றும் சிறிய நடை முறைக் கணக்கு மிகைகள் ஆகியவற்றினால் 2025 ஆம் ஆண்டில் 2.5 வீத மத்திம வளர்ச்சியை அறிக்கை எதிர்வு கூறுகின்றது. எவ்வாறாயினும் அதிக கடன்சேவை கடப்பாடுகள் அரசிறை மிகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.