இன்றும் நாளையும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்கள் 3 மணி நேரம் பணிநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தாதியர் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹடவல தெரிவித்துள்ளார்.